கால் தடுக்கி தடுமாறிய ரொனால்டோ! வெகுண்டெழுந்து அசுரத்தனமாக 2 கோல்கள் அடித்த வீடியோ
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த அபாரமான கோல்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரியாத் லெவன் அணிக்காக களமிறங்கினார்
சவுதி அரேபியாவில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச மைதானத்தில் நேற்று ரியாத் லெவன் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் ஆகிய அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் ரொனால்டோ ரியாத் லெவன் அணிக்காக களமிறங்கினார். அதே சமயம் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சார்பாக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, நெய்மர், மற்றும் எம்பாப்பே போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் களமிறங்கினர்.
Cristiano Ronaldo tucks away the penalty! pic.twitter.com/6IDOuLu7eS
— Mr Matthew AFC (@MrMatthewAFXXX) January 19, 2023
ரொனால்டோ அபார கோல்கள்
இப்போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வெற்றி பெற்றது. இருந்த போதும் ரொனால்டோ ஒற்றை ஆளாக ஆதிக்கம் செலுத்தி இரண்டு அபாரமான கோல்களை அடித்தார்.
அதில் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோலை அடித்து அசத்தினார். மற்றொரு வாய்ப்பில் கால் தடுக்கிய ரொனால்டோ சுதாரித்து கொண்டு அசுரத்தனமாக பந்தை எட்டி உதைத்து கோலாக மாற்றினார்.
BORN TO SCORE GOALS ?? @cristiano pic.twitter.com/moD0IORa0p
— 433 (@433) January 19, 2023