குறிக்கோள் நிறைவேறிவிட்டது! மகிழ்ச்சியில் திளைக்கும் ரொனால்டோ
லக்ஸம்பர்க் அணிக்கு எதிரான வெற்றி குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
போர்த்துக்கல் இரண்டாவது வெற்றி
யூரோ 2024 தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பர்க் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ரொனால்டோ அசத்தலாக இரண்டு கோல்கள் அடித்தார். இதன்மூலம் இந்த ஆண்டில் ரொனால்டோ அடித்த கோல்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.
@Getty
ரொனால்டோ மகிழ்ச்சி
மேலும், போர்த்துக்கல் அணிக்காக அவர் 121 கோல்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், '2 போட்டிகள், 2 வெற்றிகள்! குறிக்கோள் நிறைவேறியது. எங்கள் தெரிவின் இந்த நேர்மையான தொடக்கத்திற்கு பங்களித்ததில் மகிழ்ச்சி. செல்வோம்!' என தெரிவித்துள்ளார்.
2 jogos, 2 vitórias! Objetivo cumprido. Feliz por ter contribuído para este início muito positivo da nossa seleção. Vamos!???? pic.twitter.com/mLmlAVGFiU
— Cristiano Ronaldo (@Cristiano) March 26, 2023