அரையிறுதியில் நுழைந்துவிட்டோம்! உற்சாகத்துடன் ரொனால்டோ வெளியிட்ட பதிவு
கிங் கப் ஆஃப் சாம்பியன்ஸ் தொடரின் காலிறுதி போட்டியில் அல் நஸர் அணி வெற்றி பெற்றதை ரொனால்டோ உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.
அல் நஸர் வெற்றி
மர்சூல் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் அல் நஸர் மற்றும் அப்ஹா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல் நஸரின் சமி அல்-நஜெய் மிரட்டலாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அப்துல்லா அல்-கய்பரி 21வது நிமிடத்திலும், முகமது மரன் 49வது நிமிடத்திலும் கோல் அடித்ததன் மூலம் அல் நஸர் முன்னிலை வகித்தது.
Al Nassr Official
எனினும், அப்ஹா அணி வீரர் 69வது நிமிடத்தில் அப்துல்பட்டாஹ் ஆடம் கோல் அடித்தார். இறுதியில் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி அரையிறுதியில் நுழைந்தது.
ரொனால்டோ மகிழ்ச்சி
இதுகுறித்து பதிவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியிட்டுள்ள பதிவில், அணியின் சிறந்த வெற்றி! அரையிறுதிக்கு செல்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Good victory team! We move on to the semi-finals!??
— Cristiano Ronaldo (@Cristiano) March 14, 2023
?? pic.twitter.com/R0jRfJakeM
ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் அல்-வெஹ்டா அணியை ரொனால்டோவின் அல் நஸர் அணி எதிர்கொள்கிறது.
@CR7_PORFC