ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ! ஆர்ப்பரிப்பில் அதிர்ந்த மைதானம்..வீடியோ
டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவின் மிரட்டலான ஆட்டத்தினால் அல் நஸர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஹாட்ரிக் கோல்
பிரின்ஸ் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், 18வது நிமிடத்தில் எதிரணி வீரர் Hand Ball செய்ததால் அல் நஸருக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ, அசத்தலாக கோல் அடித்து தனது வேட்டையைத் தொடங்கினார். அதன் பின்னர் 23வது நிமிடத்தில் சீறிப்பாய்ந்து கோல் அடித்த ரொனால்டோ, 44வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோலை அடித்தார்.
அவரது ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்ததில் மைதானம் அதிர்ந்தது. டமாக் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.
அல் நஸர் முதலிடம்
இதனால் அல் நஸர் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 43 புள்ளிகள் பெற்று அந்த அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.
இந்தப் போட்டியில் அல் நஸர் அணி வீரர்கள் மூன்று முறை மஞ்சள் அட்டை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
About that duo ? pic.twitter.com/jiAcKIm1Ph
— AlNassr FC (@AlNassrFC_EN) February 25, 2023