கோல் மழை பொழிந்த ரொனால்டோவின் அல் நஸர்! 8-0 என இமாலய வெற்றி
சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 8-0 என்ற கோல் கணக்கில் அப்ஹா அணியை வீழ்த்தியது.
ப்ரீ கிக் வாய்ப்பில் கோல்
பிரின்ஸ் சுல்தான் பின் அப்துல் அஸிஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அப்ஹா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ப்ரீ கிக் வாய்ப்பில் அடித்த ஷாட் சீறிப்பாய்ந்து சென்று கோல் ஆனது.
From the stadium ?️
— AlNassr FC (@AlNassrFC_EN) April 3, 2024
Here's the GOAT Hattrick ?
AlNassr exclusive angle ? pic.twitter.com/5j7LDj21Al
அதனைத் தொடர்ந்து 21வது நிமிடத்திலும் ப்ரீ கிக்கில் கோல் அடித்த ரொனால்டோ, 42வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார்.
இமாலய வெற்றி
இதற்கிடையில் சாடியோ மானே 33வது நிமிடத்தில் ஒரு அடித்தார். பின்னர் ரொனால்டோ பாஸ் செய்த பந்தை அப்துல்மஜீத் (44வது நிமிடம்) கோலாக மாற்றினார்.
Free Kicks & Ronaldo: A never ending story of success ?? pic.twitter.com/kO5MQMbvYY
— AlNassr FC (@AlNassrFC_EN) April 2, 2024
இதன்மூலம் அல் நஸர் அணி முதல் பாதியில் 4-0 என முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் அல் நஸர் வீரர்கள் ருத்ர தாண்டவமாடி கோல் மழை பொழிந்தனர்.
அப்துல் ரஹ்மான் 51வது நிமிடத்திலும், அப்துல் அஸிஸ் 63 மற்றும் 86வது நிமிடங்களில் கோல் அடித்தார். கடைசிவரை அப்ஹா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், அல் நஸர் அணி 8-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
A 2️⃣nd stellar free kick from the GOAT ?⚽️ pic.twitter.com/dQCOwMk7wd
— AlNassr FC (@AlNassrFC_EN) April 2, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |