மூன்று போட்டிகளுக்கு பின் முதல் கோல்! கொண்டாடிய ரொனால்டோ..அதிர்ந்த மைதானத்தின் வீடியோ
அப்ஹா அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அப்ஹா அணி முன்னிலை
மர்சூல் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அப்ஹா அணிகள் மோதின. முதல் பாதியின் 26வது நிமிடத்தில் அப்ஹா அணி வீரர் அப்துல் பஃட்டா கோல் அடித்தார்.
அல் நஸர் அணியால் அதற்கு உடனடியாக பதில் கோல் அடிக்க முடியவில்லை. அதன் பின்னர் இரண்டாம் பாதியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரொனால்டோ மிரட்டலான கோல்
ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் அல் நஸர் அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோ அடித்த கிக்கால் சீறிப்பாய்ந்த பந்து, தடுப்புக்காக நின்றிருந்த வீரர்களுக்கு நடுவில் புகுந்து சென்று கோல் ஆனது.
மூன்று போட்டிகளுக்கு பின் கோல் அடித்ததால் ரொனால்டோ ஆர்ப்பரித்தார். அப்போது மொத்த மைதானமும் அதிர்ந்தது.
Ronaldooooooo ??? pic.twitter.com/x8TnKXWbxF
— AlNassr FC (@AlNassrFC_EN) March 18, 2023
அபார வெற்றி
அதனைத் தொடர்ந்து, 86வது நிமிடத்தில் அல் நஸருக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தலிஸ்கா அபாரமாக கோல் அடித்தார்.
இதன்மூலம் அல் நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது புள்ளிப்பட்டியலில் அல் நஸர் அணி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
@GettyImages