உறுதியான வெற்றி! அரணை உடைத்து கோல் அடித்த ரொனால்டோ
ரொனால்டோவின் அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியை வீழ்த்தியது.
ரொனால்டோ அபார கோல்
சவுதி புரோ லீக் தொடர் போட்டியில் அல் நஸர் மற்றும் அல் கலீஜ் அணிகள் மோதின. அல் அவ்வல் பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ 26வது நிமிடத்தில் அல் கலீஜின் பாதுகாப்பு அரணை தகர்த்து மிரட்டலாக கோல் அடித்தார்.
Twitter (@Cristiano)
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியின் 58வது நிமிடத்தில் ஐமெரிக் லபோர்டே அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார்.
Twitter (@Cristiano)
அல் நஸர் வெற்றி
அல் கலீஜ் அணியால் கோல் அடிக்க முடியாததால் அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து ரொனால்டோ தனது எக்ஸ் பதிவில், 'உறுதியான வெற்றி! நாங்கள் அழுத்தத்தை வைத்திருக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.
Twitter (@Cristiano)
Twitter (@Cristiano)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |