துருக்கி-சிரியா பூகம்பத்தில் உயிர் தப்பிய 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ரொனால்டோ!
போர்ச்சுகல் கால்பந்தாட்ட சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), துருக்கி பூகம்பத்தில் உயிர் தப்பிய 10 வயது சிறுவனை கட்டிப்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ர் (Al Nassr) அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கடந்த மாதம் சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் தந்தையை இழந்த சிறுவனை சந்தித்தார்.
சிறுவனின் ஆசை
சமூக ஊடகங்களில் சிறுவனை அடையாளம் காண உதவுமாறு கேட்ட, பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் சவுதி இயக்குநர்கள் குழுவின் தலைவர் துர்கி அல்-ஷேக், மனதைக் கவரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Getty/Al Jazeera
ரொனால்டோ சிரியாவிலிருந்து வந்த சிறுவன் நபில் சயீத்தை (Nabil Saeed) சந்தித்து கட்டிப்பிடித்தார், ரொனால்டோ தனது புதிய அணியான அல்-நாசருக்கு விளையாடுவதைக் காண சவுதி அரேபியாவிற்கு அழைக்கப்பட்ட சிறுவன் தனது ஹீரோவை நேரில் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டார்.
SportBible அறிக்கையின்படி, பூகம்பத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சிரியாவுக்குச் சென்ற சவுதி அரேபிய மீட்புக் குழுவால் சிறுவன் நபிலின் கோரிக்கை கைப்பற்றப்பட்டது.
فرحتك فرحه لي ...حفظ الله مولاي الملك وسمو سيدي القائد الملهم ولي العهد رئيس مجلس الوزراء والشعب السعودي الكريم والشكر للنجم العالمي الكبير... ??❤️ pic.twitter.com/9G7ZjhJx8B
— TURKI ALALSHIKH (@Turki_alalshikh) March 3, 2023
நபில் தனது தாயுடன் Mrsool Park மைதானத்தில் அல்-நஸ்ர் vs அல்-பாடின் (Al-Batin) போட்டியில் கலந்து கொண்டார். ரியாத்தில் வெள்ளிக்கிழமை நடந்த இந்த சவுதி புரோ லீக் ஆட்டத்தில் ரொனால்டோவின் அல்-நஸ்ர் அணி, அல்-பாடினை வீழ்த்தி வெற்றி பெற்றது.
A Syrian boy who survived the earthquakes and aftershocks that struck Turkey and Syria last month has fulfilled his dream of meeting Cristiano Ronaldo, after being invited to watch Al Nassr play in Saudi Arabia ⤵️ pic.twitter.com/ZhDJ666psa
— Al Jazeera English (@AJEnglish) March 5, 2023
reuters
reuters
இறப்பு எண்ணிக்கை 50,000
44,000-க்கும் அதிகமான மக்கள் இறந்ததாக துருக்கி அறிவித்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 6 அன்று துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000-த்தை தாண்டியது.
சிரியாவின் சமீபத்திய அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கை 5,914 உடன், இரு நாடுகளிலும் ஒருங்கிணைந்த இறப்பு எண்ணிக்கை 50,000-க்கு மேல் உயர்ந்துள்ளது.