தோல்விக்கு பின் மெஸ்ஸி, எம்பாப்பேவை கட்டித் தழுவிய ரொனால்டோ! நெகிழ்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்
சவுதி அரேபியாவில் நடந்த கால்பந்து போட்டிக்கு பின் ரொனால்டோ எதிரணி வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பேவை கட்டித் தழுவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நட்புரீதியான போட்டி
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் ரியாத் லெவன் அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான கால்பந்து போட்டி நேற்று சவுதியில் நடந்தது.
ரியாத் அணியில் ஜாம்பவான் ரொனால்டோவும், PSG அணியில் ஜாம்பவான் மெஸ்ஸியும் மோதிய இந்தப் போட்டியில் அனல் பறந்தது.
இறுதியில் PSG அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் ரியாத் லெவன் அணியை வீழ்த்தியது.
ரொனால்டோவின் செயல்
அதன் பின்னர் ரொனால்டோ வேகமாக வந்து எதிரணி வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பே ஆகியோரை கட்டித் தழுவினார்.
Incroyable séquence! ??
— Paris Saint-Germain (@PSG_inside) January 19, 2023
Merci Riyadh! ❤️?#PSGRiyadhSeasonTeam #PSGQatarTour2023 pic.twitter.com/gBoE0oEwIK
இந்த நிகழ்வைப் பார்த்த பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இதனை நம்ப முடியாத தருணம் என குறிப்பிட்டு PSG அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.