UFC குத்துச் சண்டை சாம்பியனுடன் மோத சென்ற ரொனால்டோ! பின்னர் செய்த செயல்..வைரலாகும் வீடியோ
UFC சாம்பியன் பிரான்சிஸ் நாஹன்னோவை சந்தித்த ரொனால்டோ, அவருடன் சண்டையிடுவதுபோல் சென்று கட்டிப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
UFC சாம்பியனுடன் ரொனால்டோ
சவுதி அரேபியாவின் அல் நஸர் அணியில் ஒப்பந்தமாகியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்று நடக்கும் எட்டிபாக் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக களமிறங்க உள்ளார்.
முன்னதாக, ரொனால்டோ UFC மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியான பிரான்ஸிஸ் நாஹன்னோவை சந்தித்தார். இருவரும் மோதிக் கொள்வது போல் சென்று சண்டைக்கு தயாராகினர். உடனே ரொனால்டோ சிரித்தபடி அவரை கட்டியணைத்தார்.
Career switch, @Cristiano ⁉️?? pic.twitter.com/LjCfqzecOj
— 433 (@433) January 21, 2023
வைரலாகும் வீடியோ
இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ரொனால்டோவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிரான்ஸிஸ், அத்துடன் ரியாத்தில் அவருடன் சிறந்த உரையாடல் நிகழ்ந்ததாகவும், அவர் தனக்கு உத்வேகம் அளிக்கும் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Great talking with the ? in Riyadh today. Very inspirational! @Cristiano pic.twitter.com/aaMXmc1GUB
— Francis Ngannou (@francis_ngannou) January 21, 2023
கடந்த ஆண்டு வலது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரான்ஸிஸ், அந்த காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.