சென்னை தமிழரின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ரொனால்டோ
பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனத்தில் ரொனால்டோ முதலீடு செய்துள்ளதோடு, அதன் விளம்பர தூதராக மாறியுள்ளார்.
பெர்ப்ளெக்ஸிட்டியுடன் கைகோர்த்த ரொனால்டோ
பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, விளையாட்டு மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். மேலும் பல பிராண்ட்களுக்கு அம்பாசடராகவும் உள்ளார்.

இந்நிலையில், AI துறையில் முன்னணி நிறுவனமானாக வளர்ந்து வரும் பெர்ப்ளெக்ஸிட்டியில்(perplexity) ரொனால்டோ முதலீடு செய்துள்ளதோடு, அதன் பிராண்ட் அம்பாசடராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பெர்ப்ளெக்ஸிட்டியின் தேடுபொறியில் "ரொனால்டோ ஹப்" என்ற புதிய அம்சம் தொடங்கப்பட்டுள்ளது.
— Aravind Srinivas (@AravSrinivas) December 4, 2025
perplexity.ai/ronaldo என்பதில், ரொனால்டோவின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவரை பற்றிய கேள்வி- பதில் பாணியிலான உரையாடல் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
ரொனால்டோ போன்ற உலகளாவிய செல்வாக்கு கொண்ட பிரபலத்துடன் கைகோர்ப்பதன் மூலம், பெர்ப்ளெக்ஸிட்டி உலகளவில் தனது சந்தாதாரர்களை அதிகரிக்க உள்ளது.
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
பெர்ப்ளெக்ஸிட்டியில்(perplexity) கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டு, தற்போது 20 பில்லியன் டொலர் மதிப்பை எட்டியுள்ளது.

சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்ப்ளெக்ஸிட்டியின் இணை நிறுவனர் மற்றும் CEO ஆக உள்ளார்.
மெட்ராஸ் ஐஐடியில் மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்த அவர், பின்னர் அமெரிக்கா சென்று அங்குள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

31 வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் , ரூ.21,190 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் இள வயது பில்லியனர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |