அல் நஸர் அதிர்ச்சி தோல்வி! கோபத்தில் போத்தல்களை உதைத்துத் தள்ளிய ரொனால்டோ..வைரல் வீடியோ
அல் இட்டிஹாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால் அல் நஸர் அணி வீரர் ரொனால்டோ போத்தல்களை உதைத்துத் தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அல் நஸர் தோல்வி
கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், அல் நஸர் மற்றும் அல் இட்டிஹாத் அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் அடிக்கும் ரொனால்டோவின் முயற்சிகளை அல் இட்டிஹாத் அணியினர் முறியடித்தனர்.
எனினும் அல் நஸர் அணியினர் தடுப்பாட்டத்தினால் எதிரணியால் கோல் அடிக்க முடியவில்லை. அதன் பின்னர் இரண்டாம் பாதியில் அல் இட்டிஹாத் அணியினர் தாக்குதலான ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ரொனால்டோவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் அல் இட்டிஹாத்தின் ரோமரின்ஹோ மிரட்டலாக கோல் அடித்தார். அதுவே அந்த அணியின் வெற்றிக்கான கோலாக மாறியது.
Where is Ronaldo ? pic.twitter.com/hJ7zjE7dGb
— Ittihad Club (@ittihad_en) March 9, 2023
இறுதிவரை அல் நஸர் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், அல் இட்டிஹாத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 47 புள்ளிகளைப் பெற்று அல் இட்டிஹாத் அணி முதலிடத்திற்கு முன்னேறியது. அல் நஸர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
கோபத்தில் எட்டி உதைத்த ரொனால்டோ
தோல்வியால் விரக்தியடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது, கீழே கிடந்த தண்ணீர் போத்தல்களை எட்டி உதைத்தார்.
இவ்வாறாக அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தை வைரலாகியுள்ளது.
You did your best..
— AlNassr FC (@AlNassrFC_EN) March 9, 2023
Eyes on the future ? pic.twitter.com/eTk5yc6odK