ரொனால்டோ மீதான துஷ்பிரயோக வழக்கு! 6 லட்சம் டொலர்கள் கோரிக்கை
துஷ்பிரயோக வழக்கு தொடர்ந்த பெண்ணின் வழக்கறிஞர் 6 லட்சம் டொலர்களை வழங்க வேண்டும் என, ரொனால்டோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மொடல் அழகியும், முன்னாள் ஆசிரியையுமான கேத்தரின் மேயோர்கா வழக்கு தொடர்ந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மேயோர்கா தோல்வியடைந்தார். அவர் 3,75,000 டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், அவரது சம்மதத்துடன் தான் ரொனால்டோ உறவு கொண்டார் என்பது நிரூபணமானதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் ரொனால்டோவின் வழக்கறிஞர்கள் மேயோர்காவின் வழக்கறிஞர் லெஸ்லி மார்க் ஸ்டோவல் 6,26,000 டொலர்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
PC: Shwemom.com/Spiegel.de
ஸ்டோவல், வழக்கின்போது மோசமாக நடந்துகொண்டதாகவும், வழக்கை தொடர கசிந்த மற்றும் திருடப்பட்ட ஆவணங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் கடந்த ஜூன் 10ஆம் திகதி நீதிமன்றத்தினால் கண்டிக்கப்பட்டார்.
அவரது நடவடிக்கையால் ரொனால்டோ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான ரொனால்டோவிற்கு 6 லட்சத்து 26 ஆயிரம் டொலர்களை, ஸ்டோவல் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.
PC: Clive Brunskill/Getty Images