ரொனால்டோ மற்றும் குடும்பத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு சொகுசு கவனிப்பு? எழுந்துள்ள விமர்சனம்
சவுதி அரேபியாவில் சொகுசாகவும், ஆடம்பரமாகவும் கவனிக்கப்படும் ரொனால்டோ மற்றும் குடும்பத்தார் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ரொனால்டோவுக்கு சிறப்பு கவனிப்பு
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நசாருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். அல் நசாருடன் மே மாதம் இறுதி வரையில் அவர் விளையாடுகிறார்.
இதையடுத்து குடும்பத்தாருடன் சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார் ரொனால்டோ. அங்கு VVIP கவனிப்பு அவருக்கு அனைத்து விடயங்களிலும் வழங்கப்படுகிறது.
Instagram @cristiano
எழுந்த விமர்சனம்
ரொனால்டோ தனது காதலி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வசிக்க அனுமதிக்கப்படுவது இதில் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதே போல ரியாத்தில் உள்ள Boulevard World பொழுதுபோக்கு பூங்காவிற்கு ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினியா மற்றும் 4 குழந்தைகளுடன் நேற்று முன் தினம் சென்றார்.
அப்போது பொதுமக்கள் உள்ளே போக 2 மணி நேரம் தடைவிதிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து விதிகளை மீறி ரொனால்டோ கவனிக்கப்படுவது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இப்படி ஒருதலைச்சார்புடைய சிறப்பு கவனிப்பை ரொனால்டோவுக்கு சவுதி அரேபியா நாடு வழங்குவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.