காற்றில் வளைந்து சென்று கோல்! ரொனால்டோவின் மின்னல் வேக ஆட்டத்தின் வீடியோ
அல் ஷபாப் அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அல் நஸர் அணி அபார வெற்றி பெற்றது.
பரபரப்பான ஆட்டம்
சவுதி புரோ லீக் தொடரில் நடந்த போட்டியில் அல் நஸர் அணி, அல் ஷபாப் அணியை எதிர்கொண்டது. ரியாத்தின் KSU மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தப் போட்டியில், முதல் கோலை அல் ஷபாப் அணி பதிவு செய்தது.
25வது நிமிடத்தில் கிறிஸ்டியன் குவான்கா தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து அவரே 40வது நிமிடத்தில் கோல் அடித்து அல் நஸர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் அல் நஸர் வீரர் தலில்கா கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
Cristiano Ronaldo’s winner keeps Al Nassr three points behind Al Ittihad with two games remaining ?? pic.twitter.com/xbW67erQsD
— ESPN FC (@ESPNFC) May 23, 2023
ரொனால்டோவின் வெற்றி கோல்
அடுத்த 7 நிமிடங்களில் அல் நஸரின் கரீப் கோல் அடிக்கவும் ஆட்டம் சமநிலைக்கு சென்றது. 59வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ மிரட்டலாக கோல் அடித்தார்.
அதுவே அல் நஸரின் வெற்றிக்கான கோல் ஆகவும் மாறியது. அவர் உதைத்த பந்து காற்றில் வளைந்து சென்று வலைக்குள் சென்று கோல் ஆனது. இறுதியில் அல் நஸர் 3-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில், 'குழு உணர்வுடன் விளையாடியதன் மூலம் வெற்றி மீண்டும் நம் கைக்கு வந்துள்ளது! எங்களுக்கு தேவையான நேரத்தில் ஆதரவளித்து நின்ற ரசிகர்களுக்கு மிக்க நன்றி' என ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
@ALNassrFC
REUTERS