ரொனால்டோ Vs மெஸ்ஸி! போட்டியின் VIP டிக்கெட்டிற்கு பல கோடிகளை ஏலத்தில் வாரி இறைத்த கோடீஸ்வரர்
கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ - மெஸ்ஸி ஒருவரையொருவர் எதிர்கொண்டு விளையாடவுள்ள போட்டிக்கான விஐபி டிக்கெட்டை தொழிலதிபர் ஒருவர் பல கோடிகளுக்கு ஏலத்தில் கேட்டுள்ளார்.
மெஸ்ஸி Vs ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப்பில் இணைந்த பிறகு, அவர் தனது அணியுடன் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 19, 2022) ஒரு நட்பு ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ள உள்ளார்.
PSG சவூதி அரேபியாவிற்குச் சென்று, அல்-நஸ்ர் மற்றும் அல்-ஹிலாலின் ஒருங்கிணைந்த XI அணியை நட்புரீதியில் சந்திக்க உள்ளது. இது லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ஒரு கால்பந்து ஆடுகளத்தில் சந்திக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
أعلى عرض للتذكرة الخيرية “فوق الخيال" عشره مليون ريال حتى الآن .. قدمه رجل الأعمال العقاري مِشرف الغامدي @mushref999 المدير العام لـ #عقار1 … ريع التذكرة كاملا لمنصة @EhsanSA
— TURKI ALALSHIKH (@Turki_alalshikh) January 13, 2023
ينتهي المزاد يوم 17 يناير. pic.twitter.com/At5Ydk66Wk
விஐபி டிக்கெட்
இந்த போட்டிக்கான விஐபி டிக்கெட்டை ஏலத்தில் $2.66 மில்லியன் (10 மில்லியன் ரியல்ஸ்) கொடுத்து கோடீஸ்வர தொழிலதிபரான முஷ்ரப் அல் கம்தி வாங்கியுள்ளார்.
விஐபி டிக்கெட், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை சந்திக்கவும், வெற்றி பெறும் அணியுடன் போட்டோஷூட்டில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கிறது.
ஏலம் ஒரு மில்லியன் ரியாலில் தொடங்கி, தற்போது 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.