வெறும் மூன்று கெஜம் தொலைவு... வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ: கொந்தளித்த ரசிகர்கள்
ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையில் மிகவும் மோசமான தருணத்தை அல் நஸர் அணியுடன் அவர் எதிர்கொண்டுள்ளார்.
ரசிகர்கள் மொத்தம்
மிகத் தெளிவான கோல் வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதும் ரசிகர்கள் மொத்தம் கொந்தளித்ததுடன், ரொனால்டோ ஓய்வு பெறும் நேரம் நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
CRISTIANO FROM 3 YARDS TO TIE IT ON AGGREGATE ? pic.twitter.com/Kg24bEqCWd
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) March 11, 2024
இதே கருத்தையே அவரது விமர்சகர்களும் முன்வைத்துள்ளனர். Al-Ain அணியுடனான அந்த ஆட்டம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்திருந்தது.
5 முறை கால்பந்து உலகின் உயரிய விருதான Ballon d'Or விருதை கைப்பற்றியுள்ள ரொனால்டோ Al-Ain அணியுடனான அந்த ஆட்டத்தின் போது சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருந்தார் என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.
வெளியேற்ற வேண்டும்
ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெறும் மூன்று கெஜம் தொலைவில் பந்தை உதைத்து கோலாக மாற்ற முடியாமல் போயுள்ளது. அவருக்கே அது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆனால் சமூக ஊடகத்தில் அவரது ரசிகர்கள் பலர் அல் நஸர் அணியில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இருப்பினும், 118வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக மாற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |