பல கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்த சவுதி கிளப்! வாய் தவறி ரொனால்டோ சொன்ன வார்த்தை... வீடியோ
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது வாய்தவறி நாட்டின் பெயரை மாற்றி சொன்ன வீடியோ வைரலாகியுள்ளது.
173 மில்லியனுக்கு ஒப்பந்தம்
கத்தார் உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நஸருடன் 173 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த நிலையில் அல் நஸர் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்ததைத் தொடர்ந்து அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, சவுத் ஆப்பிரிக்காவுக்கு (தென்னாப்பிரிக்கா) வருவது எனது தொழில் வாழ்க்கையின் முடிவு அல்ல. உண்மையைச் சொல்வதானால், மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
Ronaldo just South Africa instead of South Arabia ? pic.twitter.com/ZmWSCMdnf7
— Azania (@azania1023) January 3, 2023
சவுதி அரேபியா என்பதற்கு பதிலாக சவுத் ஆப்பிரிக்கா
பல கிளப்புகள் என்னை கையொப்பமிட முயற்சித்தன என்றார். அதாவது சவுதி அரேபியா என்பதற்கு பதிலாக சவுத் ஆப்பிரிக்கா என தவறாக பேசினார் ரொனால்டோ.
இதை சுட்டி காட்டிய ரசிகர்கள் இத்தனை கோடிக்கு சவுதி அரேபியா அணிக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு வேறு நாட்டின் பெயரை சொல்கிறீர்களே என அது குறித்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.