யூரோ 2024 தகுதிச் சுற்று... போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ
ஸ்லோவாக்கியா மற்றும் லக்சம்பேர்க் அணிகளுக்கு எதிரான யூரோ 2024 தகுதிச் சுற்றுக்கான போர்ச்சுகல் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பிடித்துள்ளார்.
200 சர்வதேச போட்டிகளில்
ஜேர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வகையில், முன்னாள் ஐரோப்பிய சேம்பியன் போர்ச்சுகல் அணி ஜே பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஸ்லோவாக்கியா அணியை எதிர்கொள்ளும் போர்ச்சுகல், மூன்று நாட்களுக்கு பிறகு லக்சம்பேர்க் அணியுடன் மோத உள்ளது. ரொனால்டோ குறித்து பெருமையாக பேசியுள்ள போர்ச்சுகல் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ்,
@afp
200 சர்வதேச போட்டிகளில் களமிறங்குவது என்பது உண்மையில் தனித்துவமான ஒன்று என்றார். ரொனால்டோ இதுவரை நான்கு தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஐந்து கோல்களை அடித்துள்ளார்.
தமது அணியில் ரொனால்டோ இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என ராபர்டோ மார்டினெஸ் குறிப்பிட்டுள்ளார். 38 வயதான ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா அணிக்காக விளையாடி வருகிறார்.
ஜூன் மாதம் ஐஸ்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கியது ரொனால்டோவின் 200வது சர்வதேச போட்டி என கூறப்படுகிறது. குறித்த போட்டியில் 1-0 என போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |