ஒருபோதும் கைவிடாதே..மிரட்டல் வெற்றிக்கு பின் ரொனால்டோவின் பதிவு
சவுதி ப்ரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் அல் அக்ஹ்டௌட் அணியை வீழ்த்தியது.
மார்செலோ, ரொனால்டோ கோல்
Prince Hathloul Sports City மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் அக்ஹ்டௌட் (Al Akhdoud) அணிகள் மோதின.
இப்போட்டியில் 7வது நிமிடத்திலேயே அல் நஸர் வீரர் மார்செலோ ப்ரோஸோவிக் கோல் அடித்தார். அடுத்த 8 நிமிடங்களில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அசாலட்டாக கோல் அடித்தார்.
அல் நஸர் வெற்றி
அதன் பின்னர் 60வது நிமிடத்தில் அல் அக்ஹ்டௌட் வீரர் ஹஸன் அல் ஹபிப் பதிலடி கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, சேவியர் காட்வின் 70வது நிமிடத்தில் கோல் அடிக்க போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
எனினும் மார்செலோ 90+1வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் அல் நஸர் அணி வெற்றி பெற்றது. வெற்றி குறித்து பதிவிட்ட ரொனால்டோ, ''Never Give up! LET'S GO!!'' என தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டார்.
Never give up! ? LET'S GO!! pic.twitter.com/Eu3dEUA201
— Cristiano Ronaldo (@Cristiano) May 9, 2024
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |