கத்தாரில் உலகக்கோப்பையில் ரொனால்டோ வரலாற்று சாதனை!
கானாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ வரலாற்று சாதனை படைத்தார்.
ஐந்தாவது உலகக்கோப்பை
கத்தார் உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் போர்த்துக்கல் மற்றும் கானா அணிகள் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல்கள் விழவில்லை.
ஆனால், இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் போட்டி போட்டு விளையாடினர். ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
@Reuters
வரலாற்று சாதனை
இதன்மூலம் அவர் புதிய வரலாற்று சாதனை படைத்தார். அதாவது ஐந்து உலகக்கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் ரொனால்டோ ஆவார்.
@Getty Images
இதற்கு முன்பு பீலே, யுவே சீலர், க்ளோஸ் ஆகியோர் 4 உலகக்கோப்பைகளில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை ரொனால்டோ முறியடித்துள்ளார்.
மேலும் இது அவருக்கு 118வது சர்வதேச கோல் ஆகும். ரொனால்டோ கடந்த 2006ஆம் ஆண்டு தனது முதல் உலகக்கோப்பை கோலை அடித்தார்.
@ Getty Images
கானா அணியின் கேப்டன் ஆண்ட்ரே அயேவ் 73வது நிமிடத்தில் கோல் அடித்தார். உடனே போர்த்துக்கல் வீரர் பெலிக்ஸ் 78வது நிமிடத்திலும், ரபேல் லீயோ 80வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர்.
போர்த்துக்கல் வெற்றி
ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் கானாவின் புகாரி ஒரு கோல் அடித்தார். எனினும் ஆட்டம் முடியும் தருவாயில் மேலும் ஒரு கோல் அடித்து டிரா செய்யும் கானாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியில் போர்த்துக்கல் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
@REUTERS
@REUTERS