சாதனைகளை நான் தேட மாட்டேன், அவை என்னை தேடி வரும்: வரலாறு படைத்த ரொனால்டோவின் பதிவு
சவுதி ப்ரோ லீக் தொடரில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய வரலாறு படைத்துள்ளார்.
Al-Awwal மைதானத்தில் நடந்த சவுதி ப்ரோ லீக் தொடர் போட்டியில், ரொனால்டோவின் அல் நஸர் மற்றும் அல் இத்திஹாத் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 45+3வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது அணிக்காக முதல் கோல் அடித்தார். 66வது நிமிடத்தில் அல் இத்திஹாத் வீரர் சுவைலேம் அப்துல்லா சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, ரொனால்டோ கோல் இரண்டாவது கோலை (69வது நிமிடம்) அடித்தார். அதனைத் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் (79வது நிமிடம்) அல் நஸர் அணிக்கும், பர்ஹாத் அலி சயீத் (88வது நிமிடம்) அல் இத்திஹாத் அணிக்கும் கோல் அடித்தனர்.
பின்னர் இத்திஹாத் அணியின் பாபின்ஹோ (90+2) மற்றும் அல் நஸரின் மெஷரி (90+5) அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியில் அல் நஸர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் தொடரின் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் எனும் புதிய வரலாறு படைத்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ''சாதனைகளை நான் தேடிப்போவதில்லை; அவை தான் என்னை தேடி வரும்'' என பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
I don’t follow the records, the records follow me. ?? pic.twitter.com/rqywmmTfZD
— Cristiano Ronaldo (@Cristiano) May 27, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |