700 கோல்கள்! புதிய வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ
கிளப் அணிகளுக்காக 700 கோல்களை அடித்த முதல் வீரர் ரொனால்டோ ஆவார்
ரொனால்டோ 191 சர்வதேச போட்டிகளில் 117 கோல்கள் அடித்துள்ளார்
போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகளுக்கான போட்டிகளில் 700 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் அணிக்காக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் மற்றும் எவெர்ட்டன் அணிகள் மோதின.
இதில் மான்செஸ்டர் அணியின் சார்பில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் அவர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். 37 வயதாகும் ரொனால்டோ 943 கிளப் போட்டிகளில் 700 கோல்களை அடித்துள்ளார்.
ஸ்போர்ட்டிங், மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், ஜுவென்ட்ஸ் ஆகிய அணிகளுக்காக ரொனால்டோ விளையாடியுள்ளார்.
இதில் மான்செஸ்டர் அணிக்காக 144 கோல்களையும், ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல்களையும், ஜுவென்டஸ் அணிக்காக 101 கோல்களையும், ஸ்போர்ட்டிங் அணிக்காக 5 கோல்களையும் அவர் அடித்துள்ளார்.
AP
AP