உறுதியாகிவிட்டது! ரொனால்டோ தான் நம்பர் 1
2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.
ரொனால்டோ அதிக கோல்கள்
போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அல்-நஸர் கிளப்பில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த அணிக்காக அவர் 49 போட்டிகளில் 43 கோல்கள் அடித்துள்ளார். இதில் 33 கோல்கள் சவுதி புரோ லீக்கில் அடிக்கப்பட்டுள்ளன.
மேலும் 2023ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரொனால்டோ 53 கோல்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரி கேன் (Harry Kane), கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) ஆகியோர் 52 கோல்கள் அடித்துள்ளனர். இதன்மூலம் ரொனால்டோ முதலிடத்தில் இருந்தார்.
ஹாலன்டிற்கு வாய்ப்பு
இந்த நிலையில், எம்பாப்பேயின் PSG மற்றும் ஹாரி கேனின் பாயர்ன் முனிச் அணிகள் தங்கள் அடுத்த போட்டியை 2024யில் தான் விளையாட உள்ளன.
இதனால் இரண்டாம் இடத்தில் உள்ள எம்பாப்பே, ஹாரி கேன் கோல் அடிக்க வாய்ப்பில்லாததால் ரொனால்டோ தான் 2023யில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்பது உறுதியாகியுள்ளது.
ஆனாலும், 50 கோல்கள் அடித்துள்ள மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலன்ட் நாளைய போட்டியில் விளையாட உள்ளார். அவர் 4 கோல்கள் அடிக்கும் பட்சத்தில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பு உள்ளது.
Getty Images
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |