கடைசி யூரோ கிண்ணத்தில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை..சாதிக்க வேறு என்ன இருக்கிறது? ரொனால்டோ உருக்கம்
தனது கடைசி யூரோ கிண்ணத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தோல்வியுடன் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு கோல் கூட அடிக்கவில்லை
ஹம்பர்க்கின் Volksparkstadion மைதானத்தில் நடந்த பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டி 0-0 என டிரா ஆனது.
இதனால் நடந்த பெனால்டிஷூட் அவுட்டில் பிரான்ஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கலை வீழ்த்தியது.
2024 யூரோ கிண்ணத் தொடரில் போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
மேலும், 39 வயதாகும் ரொனால்டோவுக்கு இது கடைசி யூரோ கிண்ணத் தொடர் ஆகும். அவர் தோல்வியுடன் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரொனால்டோ உருக்கம்
தனது இறுதி யூரோ கிண்ணத்தை உறுதிப்படுத்திய ரொனால்டோ கூறுகையில், ''சந்தேகமே இல்லாமல், இது எனக்கு கடைசி யூரோ. ஆனால் இது உணர்ச்சிவசப்படுவதைப் பற்றியது அல்ல. கால்பந்து தரும் எல்லாவற்றாலும் நான் ஈர்க்கப்பட்டேன். ரசிகர்கள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றனர்.
ஒரு குடும்பம் இங்கே இருக்கிறது. மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. இது கால்பந்தை விட்டு வெளியேறுவது பற்றி அல்ல. இன்னும் என்ன இருக்கிறது, இன்னும் நான் சாதிக்க அல்லது வெற்றி பெற வேறு என்ன இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 130 சர்வதேச கோல்கள் அடித்துள்ளார். ஆனால் அவர் ஒரு கோல் கூட அடிக்காத முதல் சர்வதேச தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |