சவுதி அரேபியாவிலும் தனது சேட்டையை தொடர்ந்த ரொனால்டோ காதலி! வைரல் வீடியோ
ரொனால்டோவின் உடையை பின்பக்கமாக திருப்பி அணிந்தபடி அவரின் காதலி ஜார்ஜினா சேட்டையுடன் குறும்புத்தனம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
ரொனால்டோ
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அல் நாசர் கிளப் அணிக்காக $200 மில்லியன் ஒப்பந்ததில் இணைந்தார். இதையடுத்து சவுதியில் அல் நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார்.
ரொனால்டோவுக்கு களத்திற்கு வெளியே ஏராளமான ஆதரவு இருக்கிறது, அதன்படி அவரின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மற்றும் மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
ரொனால்டோவின் சட்டையை
அல் நாசருக்காக ரொனால்டோவின் அறிமுகத்தின் ஆன்-ஃபீல்ட் கிளிப்களை ரோட்ரிக்ஸ் பகிர்ந்துள்ளார். அதன்படி ரொனால்டோவின் சட்டையை பின்னோக்கி திருப்பி தான் அணிந்தபடி மகிழ்ச்சியுடன் இருக்கும் வீடியோவை ஜார்ஜினா வெளியிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.