பெனால்டியில் கோல் அடித்த ரொனால்டோ: அல் நஸர் அதிரிபுரிதி வெற்றி
AFC போட்டியில் ரொனால்டோவின் அல் நஸர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்டேக்லல் எப்.சியை வீழ்த்தியது.
ரொனால்டோ கோல்
அல்-அவ்வல் பார்க் மைதானத்தில் நடந்த AFC சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அல் நஸர் மற்றும் எஸ்டேக்லல் எப்.சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் அல் நஸர் (Al-Nassr) வீரர் ஜோன் டூரன் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 27வது நிமிடத்தில் அல் நஸர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கோல் அடித்தார்.
45+2வது நிமிடத்தில் எஸ்டேக்லல் வீரர் மெஹ்ரான் அகமதி சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
10 வீரர்களுடன் விளையாடிய எஸ்டேக்லல்
இதனால் அந்த அணி இரண்டாம் பாதி முழுவதும், 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அல் நஸரின் டூரன் 84வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலினை அடிக்க, அதுவே அணியின் வெற்றி கோலாக மாறியது.
கடைசி வரை எஸ்டேக்லல் எப்.சி அணியால் கோல் அடிக்க முடியாததால் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |