என்னை தடுத்து நிறுத்த முடியாது! ரொனால்டோ வெளியிட்ட பதிவு வைரல்
போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) அல் நஸர் அணி (Al-Nassr) கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 25ஆம் திகதி நடந்த அல் ஷபாப் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இப்போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற உள்ள போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அல் ஹஸ்ம் அணியை சந்திக்கிறது அல் நஸர்.
இந்த நிலையில் ரொனால்டோ உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அத்துடன் ''Can't Stop'' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவினை தற்போது ரொனால்டோ ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Can’t stop ? pic.twitter.com/dUDLNJbJ7Z
— Cristiano Ronaldo (@Cristiano) February 29, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |