தந்தையைப் போல மகன்: தந்தையர் தினத்தில் ரொனால்டோவின் மாஸ் புகைப்படம் (வைரல்)
தந்தையர் தினத்தில் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரொனால்டோ பகிர்ந்துள்ளார்.
கால்பந்து உலகில் ஆதிக்கம்
போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில் தனது அணிக்காக நேஷனல் லீக் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
40 வயதிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
அதே சமயம் ரொனால்டோவின் மகன் கிறிஸ்டியானோ டோஸ் சாண்டோஸ் அவேய்ரோ ஜூனியர் (Cristiano dos Santos Aveiro Jr) போர்த்துக்கல் தேசிய அணியில் அறிமுகமானார்.
சர்வதேச தந்தையர் தினம்
அத்துடன் 15 வயதிற்குட்பட்டோருக்கான அல்-நஸர் அணியிலும் கிறிஸ்டியானோ ஜூனியர் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுவதால், தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
இருவரும் உடற்கட்டை காட்டும்படி போஸ் கொடுத்துள்ளனர். அதில் "தந்தையைப் போல மகனைப் போல" என ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தை ஆட்கொண்டுள்ளது.
Tal pai tal filho 😂 💪🏼 pic.twitter.com/tSfAwVQyof
— Cristiano Ronaldo (@Cristiano) June 15, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |