எந்த எதிரியையும் கண்டு பயப்பட மாட்டோம்! முதல் முறையாக மௌனம் கலைத்த ரொனால்டோ
இறுதிவரை கனவுக்காக போராடும் அணி தான் போர்த்துக்கல் என கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
வெடித்த சர்ச்சை
சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ பென்ச்சில் அமர வைக்கப்பட்ட விடயம் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து ரொனால்டோவுக்கும், அணி மேலாளர் சண்டோஸுக்கும் இடையே உரசல் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
அதற்கு பதிலளிக்கும் வகையில் சாண்டோஸ், தனக்கும் ரொனால்டோவுக்கும் இடையே எந்த வித மோதலும் இல்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த ரொனால்டோ தற்போது மௌனம் கலைத்துள்ளார்.
@Football__Tweet
ரொனால்டோவின் பதில்
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வெளிப்புற சக்திகளால் உடைக்கப்பட முடியாத அளவுக்கு மிக நெருக்கமான குழு. எந்த எதிரியையும் கண்டு பயந்துவிட முடியாத அளவுக்கு துணிச்சலான தேசம். இறுதிவரை கனவுக்காக போராடும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு அணி! நம்பிக்கை எங்களுடன் உள்ளது, போர்த்துக்கல் என்றால் வலிமை' என தெரிவித்துள்ளார்.
Um grupo demasiado unido para ser quebrado por forças externas. Uma nação demasiado corajosa para se deixar atemorizar perante qualquer adversário. Uma equipa no verdadeiro sentido da palavra, que vai lutar pelo sonho até ao fim! Acreditem connosco! Força, Portugal!???? pic.twitter.com/gUeENXSB5F
— Cristiano Ronaldo (@Cristiano) December 8, 2022