வெற்றி பெற்றும் AFCயில் வெளியேறிய ரொனால்டோவின் அணி! மீண்டும் வலுவாக வருவோம் என சூளுரை
அல் நஸர் அணி AFC தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் வலுவாக வருவோம் என தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
AFC லீக் தொடரில் அல் அய்ன் (Al Ain) அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் (Al Nassr) அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆனால், அடுத்து சுற்றுக்கு செல்வதற்கான பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணி வென்றது.
இதன் காரணமாக அல் நஸர் அணி தொடரில் இருந்து வெளியேறியதால் அந்த அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
வலுவாக திரும்பி வருவோம்
தோல்வி காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
எனினும் அவர் தனது சமூக வலைதள பதிவில், 'உங்கள் ஆதரவுக்கு நன்றி. மீண்டும் எழுந்து வருவதற்கான வழியைக் கண்டுபிடித்து, வலுவாக திரும்பி வருவோம்! எப்போதும் இணைந்திருங்கள்!' என தெரிவித்துள்ளார்.
Thank you for your support. We'll find a way to bounce back and come back stronger! Together, always! ? pic.twitter.com/AiFtrfPwwV
— Cristiano Ronaldo (@Cristiano) March 12, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |