தனது மகளை கையில் ஏந்தியிருக்கும் ரொனால்டோ.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
பிரபல கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கையில் தனது பெண் குழந்தையை ஏந்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் ரொனால்டோ-ஜார்ஜினா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஆனால் அதில் ஒரு ஆண் குழந்தை இறந்தது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனினும் இருவரும் சேர்ந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், தங்களது மற்றோரு பெண் குழந்தை வலிமையை கொடுத்திருப்பதாக தெரிவித்தனர்.
தனது மகனின் இறப்புக்கு பின்னர் ஒரு போட்டியில் விளையாடாத ரொனால்டோ, சோகத்தில் இருந்து மீண்டு வந்து விளையாடினார். ஆர்சனல் அணிக்கு எதிராக கோல் அடித்து பிரீமியர் லீக்கில் 100 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இந்த நிலையில் தனது மகளை கையில் ஏந்திக் கொண்டிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் ரொனால்டோ பதிவிட்டுள்ளார். அதனுடன் எப்போதும் அன்புடன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், தங்களது கருத்துக்களை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Forever Love…❤️?? pic.twitter.com/x18W34rYRM
— Cristiano Ronaldo (@Cristiano) April 30, 2022