முதல் கோப்பையை வெல்ல உதவியதால் பெருமை..இதுவும் உங்களுக்கு சொந்தமானது - ரொனால்டோ நெகிழ்ச்சி
அல் நஸர் அணி கோப்பையை வென்றது குறித்து ரொனால்டோ நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தார்.
அல் நஸர் சாம்பியன்
அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அல் ஹிலால் அணியை, 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல் நஸர் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து மிரட்டினார். அத்துடன் தொடரில் 6 கோல்கள் அடித்ததற்காக தங்க காலணி விருதையும் பெற்றார்.
Twitter/@AlNassrFC
முன்னாள் சாம்பியனான அல் ஹிலாலை வீழ்த்தியதன் மூலம் அல் நஸர் அணி, முதல் முறையாக அரபு கிளப் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது சாதனை படைத்தது.
AFP via Getty Images
ரொனால்டோ உருக்கமான நன்றி
கோப்பையை வென்ற பின்னர் ரொனால்டோ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார். அவரது பதிவில், 'இந்த முக்கியமான கோப்பையை முதல் முறையாக வெல்ல அணிக்கு உதவியதில் மிகவும் பெருமையடைகிறேன்!
இந்த மகத்தான சாதனையில் ஈடுபட்ட கிளப்பில் உள்ள அனைவருக்கும் மற்றும் எப்போதும் என் பக்கத்தில் இருந்த என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி! எங்கள் ரசிகர்களின் அருமையான ஆதரவு! இதுவும் உங்களுக்கு சொந்தமானது' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Extremely proud to helped the team winning this important trophy for the 1st time!
— Cristiano Ronaldo (@Cristiano) August 12, 2023
Thank you to everyone in the club that was involved in this great achievement and to my familly and friends for always being by my side!
Fantastic support by our fans!This also belongs to you!?? pic.twitter.com/MGDxXc7AD3
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |