10 ஆண்டுகளாக ஆதரித்ததில் பெருமையடைகிறேன்! ரொனால்டோ வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஒலிம்பிக் அறக்கட்டளையை ஆதரித்ததில் பெருமை அடைவதாக பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் அறக்கட்டளை
சிங்கப்பூர் ஒலிம்பிக் அறக்கட்டளை அந்நாட்டின் ஒலிம்பிக் போட்டிகளின் பாரம்பரியத்தை உருவாக்குவதும், திறமையான இளம் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் தொடர்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
சிங்கப்பூர் தொழிலதிபர் பீட்டர் லிம் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்து வருகிறார். 2019ஆம் ஆண்டில் லிம் 2021 முதல் 2030 வரை உதவித்தொகையைத் தொடர கூடுதல் 10 மில்லியனை உறுதியளித்து தனது உறுதிப்பாட்டை புதுப்பித்தார்.
TNP FILE PHOTO
ரொனால்டோ நெகிழ்ச்சி
போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பீட்டர் லிம் Scholarshipயின் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார்.
நன்கொடையாளர்களில் ஒருவராக இருக்கும் ரொனால்டோ வெளியிட்டுள்ள அந்த பதிவில், 'கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஒலிம்பிக் அறக்கட்டளை பீட்டர் லிம் உதவித்தொகையை ஆதரித்ததில் மிகவும் பெருமையடைகிறேன்.
அவர்கள் இளைஞர்களின் வளர்ச்சியில் அற்புதமான பணிகளை செய்கிறார்கள் மற்றும் மிகவும் தேவைப்படும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். நல்ல பணியை தொடர்வோம்' என தெரிவித்துள்ளார்.
Very proud to have supported the Singapore Olympic Foundation Peter Lim Scholarship for the past 10 years.
— Cristiano Ronaldo (@Cristiano) April 12, 2023
They are doing fantastic work in youth development and creating opportunities for young people most in need. Let’s continue the good work. pic.twitter.com/fiAB0anDSa