FIFA உலகக்கிண்ணத்தில் சாதனை கோல் அடித்த ரொனால்டோ: நெகிழ்ச்சி செயலால் குவியும் பாராட்டு
குரோஷியா அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ணப் போட்டியில் போர்த்துகல் த்ரில் வெற்றி பெற்றது.
இவான் பெரிசிக் கோல்
டொரோண்டோ மைதானத்தில் நடந்த FIFA உலகக்கிண்ணப் போட்டியில் போர்த்துகல் மற்றும் குரோஷியா அணிகள் மோதின.
முதல் பாதியில் கோல் விழாத நிலையில், குரோஷியாவின் 53வது நிமிடத்தில் இவான் பெரிசிக் (Ivan Perisic) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 68வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
ரொனால்டோ சாதனை
இதன்மூலம் FIFA உலகக்கிண்ணத்தின் நாக்அவுட் போட்டிகளில் கோல் அடித்த மிகவும் வயதான வீரர் (41 வயது 147 நாட்கள்) என்ற சாதனையை அவர் படைத்தார். இதுவே அவரது முதல் கோலும் (உலகக்கிண்ண நாக்அவுட்டில்) ஆகும்.
பரபரப்பான கடைசி நிமிடங்களில் கோன்காலோ ராமோஸ் கோல் அடிக்க, போர்த்துகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
ரொனால்டோ போட்டிக்கு பின்னர், இதே நாளில் கடந்த ஆண்டு கார் விபத்தில் பலியான சக வீரர் டியாகோ ஜோட்டாவின் ஜெர்ஸியை அணிந்து வெற்றியை அவருக்கு சமர்ப்பித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |