எதிரணி வீரர் நெஞ்சில் குத்திய ரொனால்டோ! Red Card கொடுத்த நடுவரையும் தாக்க சைகை..வைரலான வீடியோ
சவுதி சூப்பர் கிண்ணத்தை தொடர் அரையிறுதியில் அல் நசர் அணி 1-2 என்ற கணக்கில் அல் ஹிலாலிடம் தோல்வியடைந்தது.
முகமது பின் சயீத் மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் அல் நசர் (Al-Nassr) மற்றும் அல் ஹிலால் (Al-Hilal) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடியதால் இருதரப்பிலும் கோல் ஏதும் விழவில்லை. 45+4 நிமிடத்தில் அல்-நசர் வீரர் ஒடாவியோ அடித்த கோல் ஆஃப் சைடு என தெரிய வந்ததால், அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Ronaldo went full WrestleMania to see a red card as Al Nassr was knocked out of the Saudi Super Cup in the semis. The Ronaldo team is also 12 points behind a Neymar-less Al-Hilal with just seven games to go pic.twitter.com/lGblDWsL1R
— Eric Njiru (@EricNjiiru) April 9, 2024
இரண்டாம் பாதியில் அல் ஹிலால் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் அல் ஹிலால் வீரர் சலீம் மிரட்டலாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, 72வது நிமிடத்தில் அல் ஹிலால் அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. அந்த அணியின் மால்கம் (Malcom) தலையால் முட்டி கோல் அடித்தார்.
அல் நசர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் ஹிலால் வீரர் ஒருவர் தனது முழங்கையால் நெஞ்சில் தாக்கினார். ஏற்கனவே மஞ்சள் அட்டை பெற்றிருந்ததால் இம்முறை ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு, உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
No way Ronaldo wanted to box a referee ??? pic.twitter.com/jfeCbtedJN
— ?????? (@Afcbanks__) April 9, 2024
சிவப்பு அட்டை கொடுத்த நடுவரை ரொனால்டோ குத்துவது போல் சைகை காட்டியது பரபரப்பானதுடன், இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
அதன் பின்னர் 90+9வது நிமிடத்தில் அல் நசரின் சாடியோ மானே கோல் அடித்தார். எனினும், அல் ஹிலால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |