மீண்டும் ஐரோப்பிய அணிக்கு திரும்பும் கிறிஸ்டியானோ ரொனால்டோ: மேலாளர் உறுதி
ஐரோப்பிய அணியில் விளையாடி ஓய்வை அறிவிக்கும் திட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருப்பதாக அல் நஸர் அணியின் மேலாளர் ரூடி கார்சியா தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் ரத்து
சர்ச்சைக்குரிய நேர்காணல் ஒன்றால் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மான்செஸ்டர் யுனைடெட் அணியில் போதிய வசதிகள் ஏதுமில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார் ரொனால்டோ.
@getty
இந்த நிலையில், சவுதி அரேபிய கால்பந்து அணியான அல் நஸர் ஆண்டுக்கு 175 மில்லியன் பவுண்டுகள் தொகையில் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்தது. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ அல் நஸர் அணியில் 2 ஆண்டுகள் தொடர்வார் என்றே கூறப்படுகிறது.
ஐரோப்பா அணியில் களமிறங்கும் ரொனால்டோ
ஆனால் அல் நஸர் அணியின் மேலாளர் ரூடி கார்சியா தெரிவிக்கையில், ஓய்வை அறிவிக்கும் முன்னர் ரொனால்டோ ஐரோப்பா அணிகளில் ஒன்றில் களமிறங்குவார் என குறிப்பிட்டுள்ளார்.
@getty
உலகின் தலைசிறந்த வீரர்களில் இவரும் ஒருவர். அவர் அல் நஸர் அணியில் தனது விளையாட்டு வாழ்க்கையை முடிக்க மாட்டார், அவர் ஐரோப்பாவுக்குத் திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.