நாங்கள் நிறுத்த மாட்டோம்! சூளுரைத்த ரொனால்டோ
அல் ஃபடேஹ் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆஃப் சைடு கோல்
சவுதி ப்ரோ லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அல்-நஸர் (Al Nassr) மற்றும் அல் ஃபடேஹ் (Al Fateh) அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ஏஞ்சலோ பாஸ் செய்த பந்தை நிறுத்தி, ரொனால்டோ மிரட்டலாக கோல் அடித்தார்.

ஆனால், VRயில் சோதித்தபோது அது ஆஃப் சைடு என தெரிய வந்ததது. எனினும், ஏஞ்சலோ கேப்ரியல் (Angelo Gabriel) 41வது நிமிடத்தில், கோல் போஸ்ட் நோக்கி செய்த கிக்-ஐ, எதிரணியின் மார்வனே சாடனே (Marwane Saadane) தடுக்க முயல அது Own Goal ஆக மாறியது.
ஆக்ரோஷமான ஆட்டம்
இதனால் அல் நஸர் அணி 1-0 என முதல் பாதியில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியிலும் ரொனால்டோ ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

56வது நிமிடத்தில் அல் நஸர் அணிக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. அந்த வாய்ப்பில் முகமது சிமகன் (Mohamed Simakan) தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அல் ஃபடேஹ் அணிக்கு 72வது நிமிடத்தில் ஒரு கோல் கிடைத்தது. அந்த அணியின் மௌரட் பட்னா (Mourad Batna) அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார்.
பின்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஒரு வழியாக 87வது நிமிடத்தில் தனது கோலினை பதிவு செய்தார்.

இதன்மூலம் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து பதிவிட்ட ரொனால்டோ, "நாங்கள் நிறுத்த மாட்டோம்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
We’re not stopping pic.twitter.com/1uv6EZ2pqL
— Cristiano Ronaldo (@Cristiano) January 26, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |