ஏவுகணை அச்சுறுத்தலால் ரொனால்டோவுக்கு ஏற்பட்ட சிக்கல்
Cristiano ronaldo's match delayed for missile threat: சவூதி அரேபியாவில் ஏவுகணை அச்சுறுத்தலால் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய போட்டி ஒரு மணிநேரம் தாமதமானது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய அல்-நஸர் - நெஃப்ட்சி ஃபெர்கானா போட்டி, சவூதி அரேபியாவில் ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக ஒரு மணிநேரம் தாமதமானது.
பாதுகாப்பு எச்சரிக்கை
அல்-நஸர் - நெஃப்ட்சி ஃபெர்கானா அணிகள் மோதிய AFC சாம்பியன்ஸ் லீக் எலைட் போட்டி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது.
ஏவுகணை அச்சுறுத்தலால் ரியாத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தப் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட இரு அணி வீரர்களுக்கு காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாதுகாப்புத் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இப்போட்டி ஒரு மணிநேரம் தாமதமானது.
அல்-நஸர் வெற்றி
பின்னர் நடந்த போட்டியில் அல்-நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நெஃப்ட்சி ஃபெர்கானாவை வீழ்த்தியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 42வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
திங்களன்று, ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக, சவூதி தலைமையிலான கூட்டணி கூறியது.
அதே நேரத்தில் அன்று மாலை நகரில் குறைந்தது மூன்று வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டன என்ற தகவல் வெளியானது.
