சவுதி அரேபியாவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய ரொனால்டோ காதலி! வீடியோ, புகைப்படம்
சவுதி அரேபியாவில் ரொனால்டோ மற்றும் குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கொண்டாடியுள்ளார்.
ரொனால்டோ மனைவி பிறந்தநாள்
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அல் நாசர் கிளப் அணிக்காக $200 மில்லியன் ஒப்பந்ததில் இணைந்தார். இதையடுத்து சவுதியில் அல் நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார்.
ரொனால்டோவுடன் அவரின் காதலி ஜார்ஜினா மற்றும் 5 குழந்தைகளும் சவுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஜார்ஜினா தனது 29வது பிறந்தநாளை சவுதியின் ரியாதில் உள்ள ஹொட்டலில் குடும்பத்துடன் கொண்டாடினார்.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜார்ஜினா"
அதன்படி மூன்று அடுக்கு கேக்கை வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிறந்தநாள் கேக் மலர் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டது மற்றும் அதில் போர்ச்சுகீசிய மொழியில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜார்ஜினா" என்று எழுதப்பட்டிருந்தது.
வெள்ளை பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தனியார் அறையில் குடும்பத்தார் ஜார்ஜினா பிறந்தநாளைக் கொண்டாடினர் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இரவு உணவு அறைகளில் ஒன்றின் பாதை அர்ஜென்டினா மாதிரியின் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.