ஏமாற்றமான முடிவு, ஆனால்..விரக்தியில் ரொனால்டோ வெளியிட்ட பதிவு
அல் நஸர் அணியின் தோல்விக்கு பின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, முடிவு ஏமாற்றம் தந்ததாக பதிவிட்டுள்ளார்.
முதலிடத்தை இழந்த அல் நஸர்
நேற்று நடந்த அல் இட்டிஹாத் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் அல் நஸர் அணியை விட ஒரு புள்ளி அதிகம் பெற்ற அல் இட்டிஹாத், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
தோல்வியால் விரக்தியடைந்த ரொனால்டோ, ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது அங்கு கீழே கிடந்த தண்ணீர் போத்தல்களை கோபத்தில் எட்டி உதைத்தார்.
ரொனால்டோ ஏமாற்றம்
இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'போட்டி முடிவு ஏமாற்றம் அளித்தது, ஆனால் நாங்கள் எங்கள் சீசன் மற்றும் வரவிருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்துகிறோம். அல் நஸர் ரசிகர்களே உங்கள் ஆதரவிற்கு நன்றி, நாங்கள் உங்களை நம்பலாம் என்று எங்களுக்கு தெரியும்' என தெரிவித்துள்ளார்.
Disappointed with the result, but we stay focused on our season and the games ahead.??
— Cristiano Ronaldo (@Cristiano) March 9, 2023
Thank you Al Nassr fans for your support, we know we can count on you!???? pic.twitter.com/9L61mC2Jfn
எல்லோரும் உங்களை நம்புகிறோம், நீங்கள் உலகின் மிகச் சிறந்த வீரர் என்றும், உங்கள் வருகை சவுதி அரேபியாவிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவரது பதிவிற்கு ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.