என் வாழ்க்கையின் மோசமான கட்டத்தில் இருந்தேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து வந்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கத்தாரில் நடந்த உலகக்கோப்பைக்கு பின் தனது சர்வதேச கால்பந்து வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பரவலாக கூறப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த அவர், சவுதியின் கிளப் அணியான அல்-நஸர் கிளப் அணிக்கு மாறினார். தற்போது யூரோ 2024 தகுதிச்சுற்று போட்டிகளுக்காக ரொனால்டோ போர்த்துக்கல் அணியில் விளையாடி வருகிறார்.
@Getty Images
கால்பந்து வாழ்வில் மோசமான கட்டம்
இந்த நிலையில் லிச்சென்ஸ்டீனுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ, தனது தொழில் வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து வந்ததாக கூறினார்.
@Getty Images
மேலும் அவர் கூறுகையில், 'எனது வாழ்க்கையின் மோசமான கட்டத்தை நான் கொண்டிருந்தேன் என்று சொல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் வருத்தப்படுவதற்கு நேரமில்லை. வாழ்க்கை தொடர்கிறது, நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது எனது வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்.
நாம் மலையின் உச்சியில் இருக்கும்போது, கீழே உள்ளதை நம்மால் அடிக்கடி பார்க்க முடியாது. இப்போது, நான் மிகவும் தயாராக இருக்கிறேன் மற்றும் கற்றுக்கொள்வது முக்கியமானது.
ஏனென்றால் கடந்த சில மாதங்களைப் போல நான் இதை ஒருபோதும் சந்தித்ததில்லை. இப்போது நான் ஒரு சிறந்த மனிதனாக இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
@Getty Images