ஐரோப்பாவில் எனது வேலை முடிந்துவிட்டது! இது ஒரு புதிய சவால்.. ஊடகத்திடம் கூறிய ரொனால்டோ
ஐரோப்பாவில் நிரூபிக்க எதுவும் இல்லை என போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஊடகத்திடம் தெரிவித்தார்.
புதிய அணியில் இணைந்த ரொனால்டோ
அல் நஸர் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்ததைத் தொடர்ந்து அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய ரொனால்டோ, ஐரோப்பாவில் தனது வேலை முடிந்துவிட்டதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், 'ஐரோப்பாவில் நிரூபிக்க எதுவம் இல்லை. இது ஒரு புதிய சவாலாகும்.
கால்பந்தில் மட்டுமல்ல, இளம் தலைமுறையினருக்கும், பெண்களுக்கும் வளர்ச்சியடைய அல் நஸர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பலருக்கு தெரியாது. ஆனால், அல் நஸரிடம் பெண்கள் கால்பந்து அணியும் உள்ளது.
@REUTERS
பெண்கள் கால்பந்து இங்கு மிகவும் போட்டித் தன்மை வாய்ந்தது. எனக்கு என்ன வேண்டும் என்று தெரியும். நிச்சயமாக நான் விரும்பாததையும் அறிவேன். பல முக்கியமான விடயங்களை வளர எனது அறிவு மற்றும் எனது அனுபவத்துடன் உதவ இது ஒரு நல்ல வாய்ப்பு.
ஒவ்வொருவரின் கால்பந்து கண்ணோட்டத்தில் இருந்து நாட்டைப் பற்றிய வித்தியாசமான பார்வையை நான் வழங்க விரும்புகிறேன். அதனால் தான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினேன்' என தெரிவித்துள்ளார்.
@AP/Amr Nabil
கிளப் தலைவர் கூறிய விடயம்
சவூதி புரோ லீக்கில் இடம்பெற்றுள்ள மிக உயர்ந்த நட்சத்திரமாக ரொனால்டோ இருப்பார் என கிளப் தலைவர் முஸல்லி அல்-முயம்மர் கூறியுள்ளார்.
அத்துடன், பேச்சுவார்த்தைகளின்போது தங்களுடைய மற்ற வீரர்களைப் போலவே நடத்தப்பட விரும்புவதாக ரொனால்டோ தெளிவுபடுத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
@AP/Amr Nabil