பெண் நடுவரால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரொனால்டோ! இவரை வீட்டுக்கு அனுப்புங்கள் என கூறிய வீடியோ வைரல்
கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிருப்தியில் பெண் நடுவரை வீட்டுக்கு அனுப்புங்கள் எனக் கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.
மஞ்சள் அட்டை
Kingdom Arena மைதானத்தில் நடந்த அல் ஹிலால் அணிக்கு எதிரான போட்டியில், அல் நஸர் அணி 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ரொனால்டோ பலமுறை கோபமடைந்தார். முதல் பாதியின் முடிவில், ரொனால்டோவிடம் பந்து வந்தபோது களநடுவர் விசில் ஊதி 45 நிமிடங்கள் முடிந்துவிட்டதாக கூறினார்.
Ain't No Way Ronaldo's Playing for Al Hilal coz what is this ???pic.twitter.com/eqga9Wk49I
— ACE (@FCB_ACEE) February 8, 2024
இதனால் கோபமடைந்த ரொனால்டோ, பந்தை கையில் எடுத்து வெளியே தூக்கி உதைத்தார். அவரது இந்த செயலால் நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டை கொடுத்தார்.
ரியாத்தில் மாஸாக என்ட்ரி கொடுத்த WWE ஸ்டார் Undertaker! அடக்கமுடியாமல் சிரித்த ரொனால்டோ (வைரல் வீடியோ)
வைரல் வீடியோ
அதேபோல் அணியின் சரிவு மற்றும் தனது செயல்திறன் ஆகியவற்றால் அதிருப்தியடைந்த ரொனால்டோ, களத்தில் இருந்த பெண் நடுவரிடம் அதனை வெளிப்படுத்தினார்.
இவரை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர் சைகை காட்டினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Send the referee home ? pic.twitter.com/zg9idCWJ2b
— Al Nassr Zone (@TheNassrZone) February 8, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |