மகன் இறப்புக்கு பின் களத்தில் இறங்கிய ரொனால்டோ.. 100வது கோல் அடித்து சாதனை!
லிவர்பூல் போட்டியில் பங்கேற்காத ரொனால்டோ, ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
தனது ஆண் குழந்தை இறந்த துக்கத்தால் லிவர்பூல் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ பங்கேற்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், இந்த வாரம் தொடர்ந்து கேரிங்டனில் முழுப் பயிற்சியில் தனது அணி வீரர்களுடன் ரொனால்டோ ஈடுபட்டார். இந்த நிலையில் ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ களமிறங்கினார்.
MATIC POUR CRISTIANO RONALDO !!! #MUFC #ARSMUN pic.twitter.com/LQ4IeyGW5P
— Le Football en VOD LXVI (@LeLxvi_) April 23, 2022
துடிப்புடன் செயல்பட்ட அவர், ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் பிரீமியர் லீக்கில் 100 கோல்கள் அடித்த 33வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவரது கோலை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.