870வது கோல் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது.
அலெக்ஸ் டெலஸ் முதல் கோல்
சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல் எட்டிஃபாக் (Al-Ettifaq) அணிகள் மோதிய போட்டி Al-Awwal Park மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் அல் நஸரின் அலெக்ஸ் டெலஸ் (Alex Tells) காற்றில் பறந்து வந்த பந்தை, அப்படியே திருப்பி அடித்து கோலாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 59வது நிமிடத்தில் ரொனால்டோ தலையால் முட்டி பாஸ் செய்த பந்தை, மார்செலோ ப்ரோஸோவிக் (Marcelo Brozovic) கோலாக்கினார்.
அதன் பின்னர் 73வது நிமிடத்தில் அல் நஸர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ கோல் அடித்தார்.
870வது கோல்
இது ஒட்டுமொத்தமாக அவரது 870வது கோல் ஆகும். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்துள்ள அவரது கோல் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மேலும் 2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் (51) அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கிடையில் 85வது நிமிடத்தில் அல் எட்டிஃபாக் அணிக்கு முகமது அல் குவாய்கிபி மூலம் கோல் கிடைத்தது. இறுதியில் அல் நஸர் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
Twitter
சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளில் சேர்த்து அதிக கோல்கள் அடித்தவர்களில் ரொனால்டோ (870) முதலிடத்திலும், மெஸ்ஸி (821) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |