9 நிமிடங்களில் 3 கோல்... அசத்திய ரொனால்டோ: ஹங்கேரியை சிதைத்த போர்த்துகல்
ஆட்டத்தின் 83 நிமிடங்களும் நடப்பு சாம்பியன் போர்த்துகலுக்கு தண்ணி காட்டிய ஹங்கேரி அணி கடும் போராட்டத்தை முன்னெடுத்தது.
இறுதியில் 9 நிமிடங்களில் 3 கோல்களை பதிவு செய்து ஹங்கேரி அணியை சிதைத்து அனுப்பியது போர்த்துகல்.
3ல் 2 கோல்களை பதிவு செய்து அணியின் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் அசத்தியுள்ளார். 1964-ல் சோவியத் அணிக்கு பிறகு யூரோ கிண்ணம் துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணி 3-0 என வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
புடாபெஸ்ட் நகரின் Puskás Aréna-வில் நிரம்பி வழிந்த 60,000கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இரட்டை கோல்கள்( 87-வது நிமிடம் மற்றும் 92-வது நிமிடம்) அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
Only one man Cristiano Ronaldo = all-time EURO top scorer 🔥@Cristiano #HUNPOR #EURO2020 pic.twitter.com/iQqxEbnmRk
— sinansafar (@sinansafar1) June 15, 2021
யூரோ கிண்ணத்தில் ஒரு போட்டியின் கடைசி 10 நிமிடங்களில் 3 கோல் பதிவு செய்யும் முதல் அணி போர்த்துகல். மட்டுமின்றி, இந்த போட்டியில் இரட்டை கோல் அடித்ததன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதற்கு முன் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
மேலும், போர்த்துகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022