ரொனால்டோவுக்கு எதிரான வன்புணர்வு வழக்கு தள்ளுபடி
நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டின் நட்சித்திர கால்பந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரராக விளங்கி வருகிறார்.
இவர் இதுவரை உலகின் தலைசிறந்த வீரருக்கான கோல்டன் பந்து விருதை ஐந்து முறை வென்றுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் மேயோர்கா என்ற பெண், ரொனால்டோ தன்னை ஓட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் ரொனால்டோ அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்த வழக்கு அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ரொனால்டோவுக்கு எதிரான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Photo Credit: AP
இதுதொடர்பாக நீதிபதி ஜெனிஃபர் டோர்ஸி அளித்த 43 பக்க தீர்ப்பில், 'மயோர்காவின் வழக்கறிஞர்கள் முறையான வழக்கு செயல்முறையை தவறாக பயன்படுத்துவதால், இந்த வழக்கை தொடரும் வாய்ப்பை இழக்கிறார். இது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய்யான வழக்கு. மேலும் மயோர்காவின் வழக்கறிஞர் லெஸ்லி ஸ்டோவாலின் தவறான நடத்தையை நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது' என தெரிவித்தார்.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, தனக்கு 3,75,000 டொலர்கள் அளித்தால் வழக்கை திரும்ப பெற தயாராக இருப்பதாக கேத்தரின் கூறியதற்கு ரொனால்டோ மறுத்து தெரிவித்துள்ளார்.
Photo Credit: Twitter