மகன் இறப்புக்கு பின் முதல் முறையாக பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ரொனால்டோ!
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ரொனால்டோ - ஜார்ஜினா ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அதில் ஆண் குழந்தை இறந்ததால் அவர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். மேலும், எந்தவொரு பெற்றோரும் தங்களது வழியை உணருவார்கள் என்று ரொனால்டோ பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதல் முறையாக தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பிய நிலையில், புதிதாக பிறந்த பெண் குழந்தையும் மடியில் வைத்துக் கொண்டும், மற்றோரு மகளை அருகில் அமர வைத்துக் கொண்டும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ வெளியிட்டுள்ளார்.
அதனுடன் 'Home sweet home' என குறிப்பிட்டுள்ளார். மேலும், 'இறுதியாக ஜியோவும், எங்கள் பெண் குழந்தையும் எங்களுடன் இணைந்துள்ளார். அன்பான எல்லா வார்த்தைகளுக்கும், தோரணைகளுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம்.
உங்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது மற்றும் எங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.
இந்த உலகத்திற்கு வரவழைத்த வாழ்க்கைக்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டிய நேரம் இது' என தெரிவித்துள்ளார்.