நொடியில் மைதானத்தின் மறு மூலைக்கு பறந்து கோல் அடித்து அசத்திய ரொனால்டோ! மிரள வைக்கும் வீடியோ
யூரோ கால்பந்து தொடரில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நொடியில் மைதானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு ஓடி கடந்து கோல் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
யூரோ கால்பந்து தொடரில் ஜூன் 19ம் திகதி நடந்த குரூப் ‘F’ பிரவில் நடந்த போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி ஜேர்மனியிடம் படுதோல்வியடைந்தது.
ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் 15வது நிமிடத்தில் ரொனால்டோ முதல் கோல் அடித்து பட்டையை கிளப்பினார், அந்த கோல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மைதானத்தில் ஒரு மூலையிலிருந்த ரொனால்டோ, 14.5 நொடிகளில் 95 மீட்டர் தூரத்தை ஓடி கடந்து மறு மூலைக்கு சென்று கோல் அடித்து அசத்தியுள்ளார்.
மின்னல் வேகத்தில் மைதானத்தில் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு ரொனால்டோ பறந்து சென்று கோல் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
? Cristiano Ronaldo ?
— UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
Clear the corner. Sprint to the other end of the pitch & score. All inside 14.5 seconds! ?#EUROmobility | @volkswagen | #EURO2020 pic.twitter.com/1nvnFZLBxE
ஜமைக்கா மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 நொடிகளில் ஓடி கடந்ததே தற்போது வரை உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.